
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காகத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அங்கு செமிகண்டக்டர் பூங்கா மற்றும் சிப்காட் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்கிடையில் விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப்காட் ஆலைக்கு ஒரு நீதியா எனக் கேள்வியெழுப்பி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.