
தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது மிகுந்த வேதனையளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் விவரங்களைச் சேகரிக்க வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக ஆதரித்திருந்தும், இன்று அவையில் பங்கேற்காமல் திமுகவினர் ரகளை செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வராத சூழலில், நிகழ்ச்சி நிரலில் தீர்மானம் இடம்பெற்றிருந்தும் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாக மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.