
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நாடு முழுவதும் கணினி வழியில் நடைபெற்றது.
இந்தத் தேர்வை மொத்தம் 2.73 லட்சம் மருத்துவ மாணவர்கள் எழுதிய நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் அங்கு மட்டும் தேர்வு செப்டம்பர் 5-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள டுஓஎன் டிஜிட்டல் சிதாபுரா 2 மையத்தில் தேர்வு எழுத வந்த 300 மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் இந்த மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.