
பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ் மற்றும் சோலார் மின்சார உற்பத்தித் துறைகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
போட்டோவோல்டாயிக் தொழில்நுட்பம் மற்றும் பரவ்ட்ஸ்கைட் தொழில்நுட்பம் உள்ளிட்ட சோலார் எனர்ஜி பிரிவு சார்ந்த 12 தொழில்நுட்பங்களை சீனா ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளால் யார் வாங்குகிறார்கள், இறுதி பயன்பாட்டு இடம் என்ன என்பது போன்ற தீவிர ஆய்வுக்குப் பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்பதால் இந்தியா போன்ற நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.