
சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'கிரானைட்' வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீரமணி மீதான குற்றம் தொடர்பாக ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது 6வது வழக்காகும்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.