
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மாநாட்டின் குழு புகைப்படத்தில் பிரதமர் மோடியின் படத்தை பாகிஸ்தான் நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மோடி தனது அதிகாரப்பூர்வப் படத்தை வெளியிட்டார்.
பயங்கரவாதத்தை உத்தி சார்ந்த சொத்தாகப் பயன்படுத்தும் நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என மாநாட்டில் மோடி வலியுறுத்தினார்.