
நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய்களை உணவுப் பொருளாகத் தங்களது தளங்களில் விற்பனை செய்ததற்காக அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களின் உணவு உரிமங்களை கர்நாடக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
மனித உயிருக்கு ஆபத்தான ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை FSSAI உரிம எண்களுடன் விற்பனை செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, விளம்பரங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.