
நடிகர் அஜித்குமார் தயாரித்து நடித்துள்ள 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த டிரைலரைத் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஜித்தின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த இந்த ஆவணப்படம், அஜித்தின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.