
பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை இன்று திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த வினுஷா, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.