
உலகளவில் கணினி நினைவு சாதனங்களின் (RAM & DDR5) விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ₹8,600 ஆக இருந்த DDR5 ரக நினைவு சாதனத்தின் விலை தற்போது ₹40,000 ஆகவும், உயர் ரக சாதனங்கள் ₹31,490 லிருந்து ₹3,25,000 ஆகவும் உயர்ந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கான தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால், இனி பழைய விலையில் சேவைகளை வழங்குவது கடினம் என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.