
அமெரிக்கத் தேர்தல் அரசியல் மாற்றங்களால் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.85 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 93.82 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.36 சதவீதம் சரிந்து 86.92 டாலராகவும் உள்ளது.
இந்த விலை வீழ்ச்சி சில வாரங்களுக்குத் தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.