மும்பை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பேராசிரியர் சூரியநாராயண டூல்லாவை டீன் பதவியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
தேர்வு அறையில் அந்த மாணவர் செல்ஃபோன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, விடைகளைக் கண்டறியும் நோக்கில் வினாத்தாளை 'சாட்ஜிபிடி' செயலியில் பதிவேற்றியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவரின் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.