
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'இம்மோர்டல்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏகே பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் இதற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
முன்னதாக ஜூலை 23-ல் வெளியாகவிருந்த இப்படம், தற்போது செப்டம்பர் 4-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.