
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துணை ஜனாதிபதி வந்தபோது பாதுகாப்பு நடைமுறையில் ஏற்பட்ட மின்தடை குறித்து மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
துணை ஜனாதிபதி புறப்பட்டு விட்டார் எனக் கருதி ஜெனரேட்டர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்தவறுக்கு காரணமான அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.