
தம்புலாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை 19 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை வீராங்கனை இமிஷா துலானி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.