
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலிக்க விடுவதால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, பயணிகள் செல்போனில் வீடியோ பார்க்கும்போது இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது என்றும், இது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அனைத்துப் பேருந்துகளிலும் ஒட்ட வேண்டும் என்றும் போக்குவரத்துக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.