
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் இறக்குமதி வரி மாற்றங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.