
ஓணம் மற்றும் மிலாட்-நபி பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும், வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத் தேவைகளுக்காக ரேஷன் கடைகள் ஆகஸ்ட் 25-ம் தேதி இயங்கும் என்றும், ஆகஸ்ட் 31-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.