சேலம் ஆவின் அலுவலகத்தில் 40 லிட்டர் நெய் டப்பாக்களைத் தனது மேஜை டிராயரில் மறைத்து வைத்திருந்த துணை பொது மேலாளர் சாரதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின்போது, அவர் பதுக்கி வைத்திருந்த நெய் டப்பாக்கள் சிக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெய் டப்பாக்களைத் திருடி மறைத்து வைத்த விவகாரம் தொடர்பாக அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.