
யுபிஐ சேவையை நுகர்வோர் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும், தனிநபர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் தெளிவுபடுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுபிஐ தளம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களிடம் பணம் பெறுவதற்கு எந்தவிதமான பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படாது என்று பி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.