
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உலகளவில் ரூ.1,150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த 'ஜவான்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அட்லிக்கு பதிலளித்த ஷாருக்கான், படப்பிடிப்பின் சுவாரசியமான நாட்களை நினைவுகூர்ந்து விரைவில் மீண்டும் இணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக்கானின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.