
இந்தியாவில் பிறந்து நியூசிலாந்து தேசிய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் தனது 38ஆவது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர், நியூசிலாந்து அணிக்காக 2016 முதல் 2020 வரை விளையாடி ஒரு சதம் உட்பட 1,143 ரன்கள் சேர்த்துள்ளார்.
உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் 164 போட்டிகளில் விளையாடி 24 சதங்களுடன் 10,432 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.