
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், 3-ஆவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவையும் சுமார் 9,000 கூடுதல் வீரர்களையும் அமெரிக்கா அனுப்ப உள்ளது.
இந்த கூடுதல் படையெடுப்பின் மூலம், மத்திய கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படை மற்றும் மரைன் வீரர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேலாக அதிகரிக்கும்.
ஈரானுக்கு எதிரான ராணுவ பலத்தை வலுப்படுத்தவும், தேவைப்பட்டால் புதிய தாக்குதல்களை நடத்தவும் டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.