
கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில், 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும், பெண்கள் பிரிவில் 75 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டியின் தொடக்க விழாவில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் காயத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.