
கென்யாவின் சம்புரு மாவட்டத்தில் சஃபாரி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 5 அமெரிக்கர்கள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான யூரோகாப்டர் EC130 B4 ரக ஹெலிகாப்டரில் உயிரிழந்தவர்களில் டெலிமுண்டோ தொலைக்காட்சியின் பொது மேலாளர் 55 வயதான ஜோஸ் சுவாரெஸும் அடங்குவார்.
கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மீட்புப் பணிகளில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் சஃபாரி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.