
கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள நகைக்கடையில் 70 கிராம் எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நகை காணாமல் போனது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் எலி ஒன்று நகையை இழுத்துச் சென்று தனது பொந்திற்குள் வைத்தது தெரியவந்தது.
கடை உரிமையாளர் விஷ்வாஸ், குப்பைத் தொட்டியில் உணவுப் பொருட்கள் இல்லாததால் எலி நகையை இழுத்துச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.