
மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளதை அரசு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளது.
குளறுபடிகள் சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.