
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தனது சொந்த ஊரான கோவைக்கு திரும்பினார்.
இப்போட்டிகளில் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதுடன், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை அவர் முறியடித்திருந்தார்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்து திரும்பியுள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.