
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படப்பிடிப்பின் போது, ராஷி கண்ணாவிற்கு ரஜினி 'Living with the Himalayan Masters' புத்தகத்தைப் பரிசாக அளித்துள்ளார்.
ஆன்மீகம் குறித்த உரையாடலின் போது இந்தப் புத்தகத்தைப் பற்றி ரஜினி கேட்டறிந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை ராஷி கண்ணாவிற்கு வழங்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அதிலிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களை ராஷி கண்ணா தனது சமூக வலைதள வீடியோவில் பகிர்ந்துள்ளார்.