
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்ததுடன், தொடக்க வீரர் லஹிரு உதாரா 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.