
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், புள்ளிப்பட்டியல் அடிப்படையில் மதுரை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதிச்சுற்று 2-ல் திருச்சி அணியை எதிர்கொள்ளும், தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.