
ராஞ்சியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்ததுடன், வெஸ்ட் இண்டீஸுக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்களும், இஷான் கிஷன் 43 ரன்களும் விளாசினர்.