
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், மாநில அரசின் தலைமையகமான தலைமைச் செயலகத்திலும் மின் தடை ஏற்பட்டு அமைச்சர்களின் அறைகள் இருளில் மூழ்கின.
மின் தேவைகளுக்கும் மின் கிடைப்பளவிற்கும் இடையே உள்ள அதிகப்படியான இடைவெளியே இந்த மின்வெட்டுக்கு முதன்மைக் காரணமாகும்.
மின்வெட்டுப் பற்றாக்குறையைப் போக்க பல்வேறு அளவுகளில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும் தடங்கல்கள் தொடர்வதால், போர்க்கால அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.