
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரின் பேரில், இயக்குனர் பவன் சாதினேனியை ஐதராபாத் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
பவன் சாதினேனி தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
யூடியூபராகத் தனது பயணத்தைத் தொடங்கி, 'பிரேமா இஷ்க் காதல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பவன் சாதினேனியின் கைது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.