
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களுக்கான தேவை உயர்ந்து, அதன் விலை கிலோ ரூ.280-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையான எலுமிச்சை, தற்போது ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புளியங்குடி மார்க்கெட்டில் இருந்து வரும் வரத்து குறைந்ததும், வெயில் காரணமாக நுகர்வு அதிகரித்ததும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.