
துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில் வட கிழக்கு மண்டல அணியை இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிழக்கு மண்டலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
கிழக்கு மண்டல அணியின் சுழற்பந்து வீச்சாளர் வைபவ் சூர்யவன்ஷி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணி, வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை மத்திய மண்டல அணியை எதிர்கொள்ள உள்ளது.