கோவை நேரு ஸ்டேடியத்தில் 32 பள்ளிகளின் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் 10-வது ஆண்டு தடகளப் போட்டி நடைபெறுகிறது.
12 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான நீளம் தாண்டுதலில் தீக்சிதா, சன்விகா, அன்வி சவுகான் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அன்னை ஸ்ருதி, தீபிகா மற்றும் சஷ்ரிதா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர்.