
சீனாவில் நாய் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் குற்றவியல் பொறுப்புக்கான வயதை எட்டாததால் சிறப்பு கல்வி மையத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்புகளை சீன அதிகாரிகள் நீக்கிய நிலையில், ஹாங்காங் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்காகப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் மூலம் அந்த நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, விலங்கு கொடுமைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.