
நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த ரூ.143 கோடி நிதி வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் தொண்டு பிரிவான 'கூகுள்.ஆர்க்' வாயிலாக இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் சிறு நிறுவனங்கள் கடன் வசதிகளைப் பெறவும், சந்தையை விரிவுபடுத்தவும், ஆசிரியர்களுக்கான ஏ.ஐ. பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.