
மத்திய கிழக்கு பகுதியில் 10 ஆயிரம் போர் வீரர்களையும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும் அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய படைப்பிரிவு நவம்பர் மாத இறுதிக்குள் மத்திய கிழக்கை அடையும் என்றும், அங்கு அமெரிக்க கடற்படையினர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் சமாதான முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் நிராகரித்த நிலையில், நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.