
இந்து கடவுளான முருகப்பெருமானை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியதாக, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகி மைக்கேல் ராஜ் (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மைக்கேல் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.