
லண்டனில் நடைபெறும் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில், இந்தியாவின் அனஹத் சிங் எகிப்தின் மரியம் மெட்வாலியை 11-3, 11-2 என்ற நேர் செட்களில் 11 நிமிடங்களில் வீழ்த்தினார்.
ஆண்கள் பிரிவில் ரமித் டாண்டன் கத்தாரின் அப்துல்லா அல்-தமீமியை 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான வீர் சோத்ரானி, சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மியிடம் 9-11, 9-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.