
டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடக்கும் சைபர் மோசடிகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க புதிய அமைப்பை அனைத்து மாநிலங்களும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ரிசர்வ் வங்கி உடனடியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தயாரித்து அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், மோசடி புகார்களை விரைந்து தீர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.