
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
நடிகர் ஆனந்த்ராஜ் உருவத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், ட்ரெண்ட் ஆவது மகிழ்ச்சி என்றாலும் அது மற்றவர்களைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.