
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 68 போட்டிகளுக்கு தலைமை தாங்கி 40 வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ள நிலையில், அவரது கேப்டன்சிக்கு தான் ஒரு தீவிர ரசிகன் என ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
தங்கள் தனிப்பட்ட பேட்டிங்கை மேம்படுத்திக்கொள்வது குறித்து இருவரும் தொடர்ந்து விவாதித்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கிரிக்கெட் இல்லாத நேரங்களில் கோலி லண்டனில் வசிப்பதாலும், ஒருநாள் தொடர்கள் குறைவாக நடப்பதாலும் தாங்கள் முன்பு போல அடிக்கடி சந்திப்பதில்லை என்றும் அவர் கூறினார்.