
பிரபுதேவா மற்றும் சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் ஜியோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார்.
90-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த ஜோடி வி.ஐ.பி மற்றும் டைம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.