தாத்தா அல்லது தந்தைக்கு இதய பாதிப்பு இருந்திருந்தால், வாரிசுகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற அடிப்படை பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்.
இதய நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லைப்போ புரோட்டீன் மற்றும் இதய கால்சியம் (CT Calcium Score) பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.
மது மற்றும் புகைப் பிடித்தலைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.