
தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.