
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி சால்சா நடனம் ஆடும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பவித்ரமான சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற உடையணிந்து நடனமாடியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், இது ஒரு நடனம் மட்டுமே எனவும், படத்தின் வெளியீட்டை ஒட்டி திட்டமிட்டு சிலர் பழைய வீடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்துகிறார்கள் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.