
இந்தியாவிற்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை 2035-க்குள் அமைக்கும் இலக்குடன் இஸ்ரோ செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் பரப்பளவில் 986 கோடி ரூபாய் செலவில் புதிய ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியா இதுவரை வணிக ரீதியாக 36 நாடுகளைச் சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.